உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக சாட்சியம் அளிக்க பிரதமருக்கோ அல்லது ஜனாதிபதிக்கோ உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்கப்படவில்லை என நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் தலைவர் ஆனந்த குமாரசிறி குறிப்பிட்டுள்ளார்.
தான் தெரிவுக்குழுவில் முன்னிலையாகி உண்மைகளை வெளிக்கொண்டு வரவுள்ளதாக நேற்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிக்கையொன்றில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையிலேயே தெரிவிக்குழுவில் சாட்சியம் வழங்குமாறு பிரதமருக்கு அழைப்பு விடுக்கவில்லையென தெரிவுக்குழு தெரிவித்துள்ளது.
பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் இதுவரையில் 15 இற்கும் மேற்பட்டோர் சாட்சியம் வழங்கியுள்ளனர்.
இந்நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை தெரிவுக்குழு விசாரணைகளுக்கு அழைக்க வேண்டுமென எதிர்க்கட்சி உள்ளிட்ட சில தரப்புக்களால் அழுத்தம் கொடுக்கப்பட்டு வந்தது.
இதேவேளை தெரிவுக்குழுவின் முன் ஆஜராக போவதில்லை என ஜனாதிபதி முன்னதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க