அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்புக்கு முன்னர் பிரதமர் ரணில், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பு குறித்து இரு தலைவர்களும் நாட்டுக்கு விளக்க வேண்டும் என ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.
நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
“எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்தவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் சரியான முடிவை எடுத்திருந்தால் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை வெற்றிபெற்றிருக்கும்.
மோசடி ஊடாகவே நம்பிக்கையில்லாப் பிரேரணையை அரசு தோற்கடித்துள்ளது.
எமது பிரேரணைக்குறித்த வாக்கெடுப்புக்கு முன்னர் பிரதமரும் எதிர்க்கட்சித் தலைவரும் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் சந்தித்துள்ளனர்.
இதன்போது கலந்துரையாடப்பட்ட விடயங்களை இரு தலைவர்களும் நாட்டுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்.
1949 இல் இருந்து இன்றுவரை அரசுகளுக்கு எதிராக 26 நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் கொண்டுவரப்பட்டுள்ளன.
இவற்றில் கடந்த ஒக்டோபர் மாதம் ஆட்சிக் கவிழ்ப்பு சூழ்ச்சியின் போது மஹிந்த அரசுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட பிரேரணை மட்டுமே வெற்றிபெற்றுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க