உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

30வது வீரமக்கள் தினம் வவுனியாவில் அனுஸ்டிப்பு!

தேசிய இன விடுதலை போராட்டத்தில் தமது இன்னுயிரை இழந்த கழக போராளிகள் மற்றும் பொதுமக்களை நினைவு கூர்ந்து தமிழீழ மக்கள் விடுதலைகழகத்தால் வருடம் தோறும் கடைப்பிடிக்கபட்டு வரும் வீரமக்கள் தினம் இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்வு தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் உபதலைவரும் நகரசபை உறுப்பினருமான சந்திரகுலசிங்கம் மோகன் தலைமையில் காலை 9 மணிக்கு வவுனியா உமாமகேஸ்வரன் நினைவு இல்லத்தில் இடம்பெற்றது.

இதில் முன்னாள் வடக்குமாகாண சபை உறுப்பினர் ஜி.ரி. லிங்கநாதன், பிரதேசசபை உறுப்பினர்காளான யோகன்,உத்தரியநாதன், நந்தன்,ஜெகதீஸ்வரன், குகதாசன், நகரசபை உறுப்பினர் நா.சேனாதிராயா,மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

இதன் போது உமாமகேஸ்வரன் திருவுருவ படத்திற்கு மாலை அணிவிக்கபட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து கழகத்தின் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.

இதேவேளை யூலை 13 ,1989 ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட அ. அமிர்தலிங்கத்தின் திருவுருவ படத்திற்கு ஒளிச்சுடர் ஏற்றபட்டு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்த பட்டதுடன், நினைவுபேருரைகளும் நிகழ்த்தபட்டது.

குறித்த நிகழ்வு இன்றிலிருந்து எதிர்வரும் 16 ம் திகதி வரை தொடர்ந்து நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க