கொழும்பு துறைமுகம் மற்றும் கொலன்னாவையில் உள்ள பெற்றோலிய கூட்டுத்தாபன (சிபிசி) எரிபொருள் சேமிப்பு களஞ்சியசாலையை இணைக்கும் எண்ணெய் குழாய் திட்டம் எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் நிறைவடையும் என பெற்றோலிய அமைச்சு தெரிவிக்கிறது.
12 அங்குலத்தில் ஐந்து கிலோமீட்டர் நீல குழாய் அமைக்கும் குறித்த திட்டம் அதன் இறுதிக் கட்டத்தில் புளூமெண்டலில் பகுதியில் காணப்பட்ட சட்டவிரோத கட்டடங்களால் இடை நிறுத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து 1.7 பில்லியன் ரூபாய் செலவில் குறித்த முறையற்ற பகுதியில் வசித்த குடும்பங்களை இடமாற்றம் செய்ய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
துறைமுகத்திற்கு இறக்குமதி செய்யப்படும் எரிபொருளை கொலன்னாவையில் உள்ள சேமிப்பு களஞ்சியசாலைக்கு குறித்த குழாய் ஊடாக பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கப்படுகிறது என அமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
வழக்கமாக பழையமுறையின் படி எரிபொருளை சேகரிக்க அரசாங்கம் முன்னர் அதிக செலவுகளைச் மேற்கொண்டுள்ளதென அவர் சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில் புதிய குழாய் வழியாக எரிபொருள் பெற்றுக்கொள்ளும் திட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் தொடங்கும் என்று ஹெட்டியாராச்சி குறிப்பிட்டார்.
கருத்து தெரிவிக்க