முஸ்லிம்களின் திருமண சட்டங்களில் சில திருத்தங்களை மேற்கொள்வதற்கு முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
இதற்கமைய குறித்த திட்ட யோசனை எதிர்வரும் காலத்தில் நீதி அமைச்சரினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதி அமைச்சர் தலத அத்துகோரளவினால் முன்வைக்கப்பட்ட முஸ்லிம்களின் திருமண சட்ட திருத்தம் தொடர்பில் முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆராய்ந்து வருவதாகவும் அது தொடர்பிலான அறிக்கை நீதியமைச்சிடம் சமர்பிக்கப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் அமீர் அலி குறிப்பிட்டுள்ளார்.
திருமணத்துக்கான வயதெல்லை, திருமணம் செய்யும் பெண்ணின் விருப்பம் உள்ளிட்ட சில அத்தியாவசிய சரத்துக்களில் திருத்தம் மேற்கொள்ள முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
இதன் படி முஸ்லீம் பெண்களின் திருமண வயதெல்லையை 18 ஆக நிர்ணயிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என அமீர் அலி மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து தெரிவிக்க