முல்லைத்தீவில் நேற்று வீசிய மழையுடன் கூடிய காற்றின் காரணமாக சேதமடைந்த வீடுகளை புனரமைப்பதற்கான உடனடி நடவடிக்கைகளை முல்லைத்தீவு பிரதேச செயலகம் மேற்கொண்டுள்ளது.
இதற்கான நிதியை பெற்றுக்கொள்வதற்கு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்துடன் தாம் தொடர்பு கொண்டிருப்பதாக முல்லைத்தீவு மேலதிக மாவட்ட செயலாளர் கே.தனபாலசுந்தரம் தெரிவித்தார்.
சேதமடைந்த வீடுகள் தொடர்பான மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 130 000 ரூபா நிதியை பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
நேற்று வீசிய காற்றுடன் கூடிய மழையின் காரணமாக 13 வீடுகள் ஓரளவுக்கே சேதமடைந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை பல மாதகாலமாக நிலவிய வரட்சிக்கு பின்னர் நேற்றைய தினம் முல்லைத்தீவு மாங்குளம் ஆகிய பிரதேசங்களில் கடும் காற்றுடன் கூடிய மழை பெய்துள்ளது.
இதனால் பயிர்களும் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க