பாடசாலை கல்வியை கண்காணிக்க சுயாதீன அமைப்பை உருவாக்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அமைப்பை உருவாக்குவதன் மூலம் கல்வி நிறுவனங்களின் தரம் மற்றும் அங்கீகாரத்தை பேண முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த திட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் பெற்ற பின்னர் கல்வி அமைச்சரின் அறிவுறுத்தலுக்கமைய அமைப்பின் பணிப்பாளராக கல்வி நிபுணர் ஒருவர் நியமிக்கப்படுவார்.
ஒரு நேர்காணலைத் தொடர்ந்து நியமிக்கப்படும் குழுவின் ஏனைய உறுப்பினர்களைத் தெரிவு செய்ய விண்ணப்பங்கள் கோரப்படும் என்று அமைச்சு குறிப்பிட்டது.
இந்த அமைப்பு, முன்னேற்றம் தேவைப்படும் பாடசாலைகளுக்கு அடிக்கடி வருகை தருவதோடு, பாடசாலைகளின் தரத்தை உயர்த்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என கல்வி அமைச்சு தெரிவிக்கின்றது.
கருத்து தெரிவிக்க