கடந்த 6 மாதங்களில் பேஸ்புக் சமூக வலைத்தளத்தை முறைகேடாக பயன்படுத்தியதாக 748 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தொலைத்தொடர்புகள் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சின் கீழ் இயங்கும் கணினி அவசர தயார் நிலை குழு தெரிவித்துள்ளது.
இவற்றில் கணக்குகளை முடக்குதல், தவறான முறையில் பயன்படுத்துதல், ஆகியவை தொடர்பில் 267 முறைப்பாடுகளும், போலியான கணக்குகள் தொடர்பில் 481 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒருவருடைய தனிப்பட்ட தகவல்களை களவாடி அவரை தவறான மனிதராக காட்ட முற்படுவது, குறித்த குற்றங்களில் முதன்மை வகிப்பதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன் சமூக வலைத்தளங்களில் போலியான கணக்குகள் ஆசிய நாடுகளிலேயே அதிகம் உருவாக்கப்படுவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக 76 வீதமான இந்தியர்கள் போலியான தகவல்களையே பதிவிட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க