மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திலுள்ள ஏறாவூர் பற்று மேற்கு கோட்டத்தின் நாடக விழா மட்டக்களப்பு கரடியனாறு இந்து வித்தியாலயத்தில் வெள்ளிக்கிழமை (12) நடைபெற்றது.
கல்வித் திணைக்களத்தினால் நடாத்தப்படும் கோட்டமட்டம், வலய மட்டம், மாகாணமட்டம், தேசியமட்டம் ஆகிய போட்டிகளில் வெற்றி பெறும் நாடகங்கள் தெரிவு செய்யப்படவுள்ளன.
மட்டக்களப்பு மேற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் சிவானந்தம் சிறீதரனின் ஆலோசனைக்கமைவாக, கோட்டமட்ட நாடக விழா இணைப்பாளர் பு.சதீஸ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வல், பிரதிக் கல்விப் பணிப்பாளர் க.ஹரிகரராஜ் மற்றும் நாடக துறைசார் நடுவர்கள், பாடசாலை அதிபர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது ஏறாவூர் பற்று மேற்கு கோட்ட பாடசாலை மாணவர்களின் நாடகங்கள் மேடையேற்றப்பட்டதுடன் இதில், கித்தூள் ஸ்ரீ கிருஸ்ணா வித்தியாலயம் முதலாம் இடத்தினையும், பன்குடாவெளி றோமன் கத்தோலிக்க வித்தியாலயம் 2 ஆம் இடத்தினையும், காயான்குடா கண்ணகி வித்தியாலயம் 3ஆம் இடத்தினையும் பெற்றுக்கொண்டது.
இந்த கோட்ட மட்டப் போட்டியில், 1 ஆம் இடம் பெற்ற நாடகம் எதிர்வரும் 22 ஆம் திகதி நடைபெறவுள்ள வலய மட்ட போட்டியில் பங்குபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க