எரிபொருள் கொள்முதல் தொகையை ஈடுசெய்ய இலங்கை மின்சார சபை அரச வங்கியிடமிருந்து ரூ .15 பில்லியன் கடனைப் பெற முடிவு செய்துள்ளது.
மின் மற்றும் எரிசக்தி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
தற்போது, மின்சார சபை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு எரிபொருள் கொள்முதல் தொடர்பாக சுமார் 80 பில்லியன் டொலர் கடன்பட்டுள்ளது, இது மின் தடை ஏற்படும் என்ற அச்சத்தைத் பொதுமக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வாரம் நிலுவையில் உள்ள கொடுப்பனவுகளை மேற்கோள் காட்டி பெற்றோலிய கூட்டுத்தாபனம் மின்சார சபைக்கான எரிபொருள் விநியோகத்தை நிறுத்தியதோடு மின்வெட்டு பற்றிய எச்சரிக்கைகள் வெளியிடப்பட்டன.
இந்நிலையில் குறித்த கடன்களை அடைக்குமாறு ஜனாதிபதி நிதி அமைச்சிற்கு அறிவுறுத்தியதையடுத்து இந்த பிரச்சினை தீர்க்கப்பட்டது.
எவ்வாறாயினும், மானிய விலையில் மின்சாரம் வழங்குவதால் பெரும் வருமானத்தை இழந்துவிட்டதால், கடன்களில் ஒரு பகுதியை தள்ளுபடி செய்யவோ அல்லது புதிய மின்சார கட்டண கட்டமைப்பை அறிமுகப்படுத்தவோ திறைசேரிக்கு கோரிக்கை முன் வைக்க மின்சார சபை திட்டமிட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க