பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் முன்னிலையாகி கிடைக்கக்கூடிய அனைத்து தகவல்களையும் வழங்குவதாக விசேட அறிக்கையொன்றின் ஊடாக தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திற்கு எதிராக ஜே.வி.பி முன்வைத்த நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து அவர் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள உண்மையை அரசாங்கம் வெளிப்படுத்தும் என்று பிரதமர் குறித்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும் உலகளாவிய பயங்கரவாதத்தைத் தடுக்க சில புதிய சட்டங்களை இயற்றவும் சர்வதேச புலனாய்வு அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றவும் எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பயங்கரவாத தாக்குதல்களை விசாரணை செய்வதற்காக நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க