வடக்கு செய்திகள்

நாட்டுக்காக ஒன்றிணைவோம் திட்டம்: முல்லைத்தீவு விவசாயிகள் பயனடைவு!

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஜனாதிபதியின் நாட்டுக்காக ஒன்றிணைவோம் வேலைத்திட்டத்தில் ஒன்றான தேசிய உணவு உற்பத்தி திட்டத்தினை விருத்தி செய்யும் நோக்கில் 10.16 மில்லியன் ரூபா விவசாயிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் 50 வீத மானிய அடிப்படையில் 20 விவசாயிகளுக்கு சூரிய சக்திமூலம் நீர்இறைக்கும் இயந்திரங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.

100 விவசாயிகளுக்கு புல்வெட்டும் இயந்திரங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன 52 விவசாயிகளுக்கு நீர்இறைக்கும் இயந்திரங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.
36 விவசாயிகளுக்கு பயன்தரு மாமரக்கன்றுகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.

இளையவளர்ப்புமூலம் 36 விவசாயிகளுக்கு 3966 வாளைக்குட்டிகளும் வழங்கிவைக்கப்பட்டுள்ளன. இவை மானிய அடிப்படையில் விவசாயிகளுக்கு வழங்கிவைக்கப்பட்டு அவற்றை வைத்து விவசாயிகள் பயனடையும் விவசாய செய்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள நன்நீர் மீன்பிடி தொழிலாளர்களை ஊக்கிவிக்கும் முகமாக வவுனிக்குளம், கோட்டைகட்டியகுளம், முத்துஜயன்கட்டுக்குளம், உடையார்கட்டுக்குளம், மருதமடுக்குளம், மதவாளசிங்கன் குளம் ஆகிய குளங்களில் நெக்டப் நிறுவனம் ஊடாக ஒரு இலட்சம் மீன்குஞ்சுகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க