*தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தவறான முடிவை எடுத்துவிட்டது. – கூட்டுஎதிரணி, ஜே.வி.பி. கடும் விசனம்.
*ஒற்றுமையை மீண்டும் நிரூபித்துவிட்டோம். முன்நோக்கி பயணிப்போம். – ஐக்கிய தேசியக் கட்சி.
*வழமைபோல் அரசாங்கத்துக்கு கைகொடுத்தது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. மலையக கட்சிகளும் சார்பாக வாக்களிப்பு.
* நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக 92 வாக்குகளும், எதிராக 119 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதன்படி பிரேரணை மண்கவ்வியது. அரசியல் பலப்பரீட்சையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன் அரசு வெற்றிபெற்றது.
*நாடாளுமன்றம் நாளைவரை ஒத்திவைப்பு,
*வாக்கெடுப்பு தற்போது நிறைவடைந்துள்ளது.
*நம்பிக்கையில்லாப் பிரேரணைமீது வாக்கெடுப்பு ஆரம்பம்.
* ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்துக்கு எதிராக ஜே.வி.பியால் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைமீதான வாக்கெடுப்பு இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ளது. தற்போது அழைப்பு மணி ஒலிக்கவிடப்பட்டுள்ளது.
*ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபைக்குள் வருகை தந்த வண்ணமுள்ளனர்.
கருத்து தெரிவிக்க