உள்நாட்டு செய்திகள்புதியவை

நாணய சட்ட திருத்த முன்மொழிவு: அதிருப்தியில் எதிர்க்கட்சி

1949 ஆம் ஆண்டின் 58 ஆம் இலக்க நாணயச் சட்டம் தொடர்பாக அரசாங்கத்தால் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் குறித்து கூட்டு எதிர்க்கட்சி இன்று கவலை வெளியிட்டுள்ளது.

குறித்த திருத்தங்கள் இயற்றப்பட்டால் நாட்டின் பொருளாதாரத்திற்கு பாதகமாக அமையும் என மஹிந்த ராஜபகஷ தலைமையிலான எதிர்க்கட்சி குறிப்பிட்டுள்ளது.

முன்மொழியப்பட்ட திருத்தங்கள், நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர் பொருளாதார வல்லுநர்கள் மற்றும் நாட்டின் புத்திஜீவிகள் சமூகத்தின் பரந்த விவாதத்திற்கு உட்படுத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சி கோரியுள்ளது.

குறித்த திருத்தத்துக்கான அமைச்சரவை அறிக்கை சமர்ப்பித்த உடனேயே, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அது தொடர்பில் அவதானம் செலுத்தியதோடு கவலை வெளியிட்டிருந்தார்.

திறைசேரி செயலாளரை மத்திய வங்கியின் நிர்வாகக் குழுவிலிருந்து (சிபிஎஸ்எல்) நீக்குவதற்கு முன்மொழியப்பட்ட திருத்தங்களில் ஒன்றை உதாரணமாக சொல்ல முடியும்.

குறித்த திருத்தங்களை சட்ட வரைவாளருக்கு அனுப்பப்படுவதற்கு முன்னர் தேசிய பொருளாதார ஆலோசனை சபையின் வல்லுநர்கள் ஆய்வு செய்ய வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ பரிந்துரைத்துள்ளார்.

கருத்து தெரிவிக்க