உள்நாட்டு செய்திகள்வடக்கு செய்திகள்

புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துக்கு 77.4 மில்லியன் ஒதுக்கீடு

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகப் பிரிவுக்கு கம்பெரலிய திட்டத்தினூடாக 101 வேலைத்திட்டங்களை நடைமுறைப் படுத்துவதற்கு 77. 4 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் 69 திட்டங்கள் தற்போது நிறைவு செய்யப்பட்டு இருப்பதாகவும் ஏனைய திட்டங்கள் நடைமுறையில் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசேட கலந்துரையாடல் அரசாங்க அதிபர் பங்கு பற்றுதலோடு புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

19 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்ட புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் சிவப்பிரகாசம் சிவமோகன் ஊடாக 37 திட்டங்களுக்காக 31 . 4 மில்லியன் ரூபாய் நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா அவர்களின் ஊடாக 26 திட்டங்களுக்கு 19.5 மில்லியன் ரூபாவும் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஒதுக்கீட்டின் ஊடாக 22 திட்டங்களுக்காக 16.7 மில்லியன் ரூபாவும் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் ஊடாக 16 திட்டங்களுக்காக 9. 8 மில்லியன் ரூபாவாக மொத்தமாக 101 திட்டங்களுக்காக 77. 4 மில்லியன் ரூபாய்கள் கிடைக்கப் பெற்ருள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

இது தொடர்பான மீளாய்வு கலந்துரையாடலே மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் இடம் பெற்றது.

இந்த கலந்துரையாடலில் பிரதேச செயலாளர் பிரதேச செயலக கணக்காளர் உதவிப் பிரதேச செயலாளர் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

கருத்து தெரிவிக்க