ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்துக்கு எதிராக ஜே.வி.பியால் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைமீது இன்று (11) மாலை வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.
இந்நிலையில் ஐக்கிய தேசிய முன்னணி உறுப்பினர்கள் அனைவரும் சபைக்கு வருமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் இருந்து மக்களையும் நாட்டையும் காப்பாற்ற தவறியுள்ளதாக தெரிவித்து அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை முன் வைக்கப்பட்டுள்ளது.
குறித்த பிரேரணையை ஆதரித்து வாக்களிப்பதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
இதேவேளை 1949 ஆம் ஆண்டின் 58 ஆம் இலக்க நாணயச் சட்டச் சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் தொடர்பாக நாடாளுமன்றத்திற்குள் ஊடக சந்திப்பை நடத்திய கூட்டு எதிர்க்கட்சி (JO) இந்த பிரேரணையில் வாக்களிப்பது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க