உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் கில்லஸ்

ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளர் கில்லஸ் டி கெர்ச்சோவ், மாலைதீவு மற்றும் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

இன்று முதல் ஜூலை16 ஆம் திகதி அவரது விஜயம் இடம்பெறவுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அவர் தனது இலங்கைக்கான விஜயத்தின்போது அரசாங்க உறுப்பினர்கள், எதிர்க்கட்சியினர், பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளார்.

2007 முதல் ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளராக கில் டி கெர்ச்சோவ் செயற்பட்டு வருகின்றார்

கருத்து தெரிவிக்க