உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

மத்ரசா கல்வி என்றால் என்ன- அக்குறணை ரஹ்மானியா மத்தரசாவில் விளக்கம்

நாட்டில் தற்போது மத்ரசா கல்வி முறைபற்றி உருவாகியுள்ள தவறான சந்தேகப்பார்வை மற்றும் முஸ்லிம்களது நடவடிக்கைகள் என்பன தொடர்பாகவும் முஸ்லிம் அல்லாத இனங்கள் சந்தேகம் கொண்டு பார்ப்பதையும் நிவர்த்திக்கும் வகையில் அக்குறணை ரஹ்மானியா மத்தரசாவில் ஒரு வைபவம் நேற்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

இதில் அக்குறணை பிரதேசத்தைச் சேர்ந்த பௌத்த, இந்து, கிருஸ்தவ மத குருமார்களும் மற்றும் பொலீஸ் அதிகாரிகளும், பிரதேச சபை உறுப்பினர்களும் மற்றும் பிரதேச செயலாளர் காரியாலய உயர் அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர்.

குறித்த நிகழ்வில் மத்ராசா என்றால் என்ன என்பது தொடர்பாக நேரடி நிகழ்வு ஒன்று நடாத்தப்பட்டது.

‘கலாச்சார நல்லிணக்க சந்திப்பு’ என்ற பெயரில் ஒழுங்கு செய்யப்பட்ட மேற்படி நிகழ்வில் கலந்து கொண்ட மக்கள் அக்குறணை அர்றஹ்மானியா அரபுக்கல்லூரியில் என்ன நடக்கின்றது என்ற சந்தேகங்களையும் கேட்டு தெரிந்து கொண்டுள்ளனர்.

கருத்து தெரிவிக்க