உடலின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கும் மூலிகைகளில் வேப்பிலையும் ஒன்று. இந்த வேப்பிலை நமக்கு ஒரு வரப்பிரசாதம். வேப்ப மரத்தின் ஒவ்வொரு பாகமும் பயனுள்ளது. இதனை 4.000 வருடங்களாக ஆயுர் வேதத்தில் பயன்படுத்தி வருகின்றனர். இந்த வேப்பிலை எப்படி அழகுப் பொருளாக பயன்படுகிறது என்பதை பார்ப்போம்.
வேப்பிலையை கொதிக்கும் நீரில் போட்டு நீர் நிறம் மாறும் வரை ஊறவைத்து, பின்னர் வடித்து எடுத்து குளிக்கும் நீரில் கலந்து குளித்தால், முகத்தில் உள்ள பருக்கள், வெள்ளைப் புள்ளிகள் போன்றன மறைந்து விடும்.
இரவில் படுக்கும் போது வேப்பிலைச் சாறில் பஞ்சை நனைத்து முகத்தில் பூசி வர, கரும்புள்ளிகள் மறையும். அத்துடன் வேப்பிலை சாறை தலையில் தேய்த்து முழுகி வந்தால் பொடுகுகள் மறைந்து விடும்.
வேப்பிலையை விழுது போன்று அரைத்து சிறிதளவு தேன் கலந்து தலையில் தேய்த்து முழுகி வந்தால் பூச்சி கடிகள் மறைந்து விடுவதோடு தலைமுடியும் பட்டுப் போன்று இருக்கும்.
வேப்பிலை, புதினா, குப்பைமேனி இலை மூன்றையும் விழுது போன்று அரைத்து, அதனுடன் பால் 2 தேக்கரண்டி சேர்த்து முகத்தில் பூசி 30 நிமிடங்கள் கழித்து கழுவி விடவும். இப்படி ஒரு கிழமையில் இரண்டு தரம் செய்து வந்தால் முகத்தில் உள்ள கருமை நீங்கி பளபளப்பாகும்.
கருத்து தெரிவிக்க