கிழக்கு செய்திகள்

கிழக்கில் கலாசார நடவடிக்கைகளை மேம்படுத்த நடவடிக்கை

கிழக்கு மாகாணத்தில் கலை இலக்கிய கலாசார வேலைத்திட்டங்களை மேம்படுத்தும் பாரிய நடவடிக்கைககளை கிழக்கு மாகாண கல்வி கலாசார அமைச்சு மேற்கொண்டுள்ளது.

இது தொடர்பாக கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட கலை மன்றங்களின் செயற்பாடு பற்றிய விசேட கலந்துரையாடல் காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திருமதி வி.ரவீந்திரன் தலைமையில் இடம் பெற்ற இந்த கலந்துரையாடலில் மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலுள்ள பிரதேச செயலகப்பிரிவுகளில் கடமையாற்றும் கலாசார உத்தியோகத்தர்கள் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கலை இலக்கிய மன்றங்களின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு தமிழ் சங்க செயலாளர் எஸ். தவராஜா இஸ்லாமிய இலக்கய கழக தலைவர் ரீ.எல்.ஜவ்பர்கான் உட்பட கலை இலக்கிய மன்றங்களின் தலைவர்கள் உரைநிகழ்த்தினர்.

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கலாசார உத்தியோகத்தர்களுக்கான வேலை முன்னேற்ற அறிக்கை பற்றிய மீளாய்வு தொடர்பாகவும் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட கலை மன்றங்களின் செயற்பாட்டு முன்னேற்ற அறிக்கை பற்றியும் இதன் போது கலந்துரையாடப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கலை இலக்கிய மன்றங்களின் கடந்த காலங்களில் மேற் கொள்ளப்பட்ட கலை இலக்கிய செயற்பாடுகள் பற்றியும் எதிர் கால வேலைத்திட்டங்கள் பற்றியும் கலை இலக்கிய மன்றங்களின் பிரதி நிதிகளினால் இக் கலந்துரையாடலில் பேசப்பட்டன.

கருத்து தெரிவிக்க