உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

நீராவியடிப் பிள்ளையார் ஆலய விவகாரம்: விசாரணகள் ஆரம்பம்

செம்மலை நீராவியடிப்பிள்ளையார் ஆலய விவகாரம் இன்று வவுனியா மேல் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதுடன் இரு தரப்பினரும் வவுனியா மேல் நீதிமன்றில் முன்னிலையாகி தமது தரப்பு வாதங்களை முன்வைத்து வருகின்றனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் ஆலய வளாகத்தை சுவீகரித்து அங்கு பௌத்த விகாரை அமைத்து குடிகொண்டிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேதானந்த தேரர் என்ற பௌத்த துறவியால் பாரிய புத்தர் சிலை ஒன்று நாட்டப்பட்டு பிள்ளையார் ஆலயத்தில் கடந்த ஜனவரி மாதம் 14 ஆம் திகதி வழிபாடுகளுக்கு சென்ற மக்களோடு முரண்பட்ட நிலையில் முல்லைத்தீவு காவல்துறையால் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந் நிலையில் வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில் கடந்த மதம் மாதம் 6 ஆம் திகதி குறித்த பிரதேசம் தொல்பொருள் திணைக்களத்துக்கு இன்னமும் வர்த்தமானி மூலம் அறிவிக்கப்படவில்லை எனவும் இந்நிலையில் இரண்டு தரப்பினரும் எந்தவித மத வழிபாடுகளுக்கும் இடையூறு இல்லாமல் வழிபாடுகளை மேற்கொள்ளுமாறும் உத்தரவிடப்பட்டிருந்தது.

அதை மீறுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் இந்த தீர்ப்புக்கு எதிராக செயற்பட்டதாக தெரிவித்து பௌத்த துறவி மற்றும் பௌத்த துறவி சார்பில் மன்றில் ஆஜரான சட்டத்தரணிகள் உள்ளிட்டோரால் வவுனியா மேல் நீதிமன்றில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த நிலையில் இன்றைய தினம் வவுனியா மேல் நீதிமன்றில் வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தின் சார்பில் சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம், ஆலய நிர்வாக சபையினர் கலந்துகொண்டுள்ளனர்.

கருத்து தெரிவிக்க