அமெரிக்க அரசாங்கத்துடனான சோபா உடன்பாட்டில் அரசாங்கம் கையெழுத்திடாது என ஐக்கிய தேசியக் கட்சி தகவல் தெரிவித்துள்ளது.
அலரிமாளிகையில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஐ.தே.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர், ஹேஷ விதானகே இதனை கூறியுள்ளார்.
அது மாத்திரமின்றி , பிரதமர் செயலகம் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், அமெரிக்காவுடன் சோபா உடன்பாட்டை செய்துகொள்வது தொடர்பான எந்த முன்மொழிவும் பாதுகாப்பு அமைச்சினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் அமெரிக்காவுடன் சோபா உடன்பாட்டை செய்துகொள்ளும் எந்த முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க