உள்நாட்டு செய்திகள்

பங்காளிகளுடன் மஹிந்த இன்று மந்திராலோசனை

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவுக்கும், கூட்டு எதிரணியில் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்குமிடையிலான சந்திப்பு இன்று (09) மாலை நடைபெறவுள்ளது.

அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை, ஜனாதிபதி வேட்பாளர் விவகாரம் உட்பட மேலும் சில முக்கிய விடயங்கள் தொடர்பில் இதன்போது விரிவாக கலந்துரையாடப்படவுள்ளன என்று கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களான தினேஷ் குணவர்தன, வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில, விமல்வீரவன்ஸ ஆகியோர் சந்திப்பில் பங்கேற்கவுள்ளனர்.

 

 

 

கருத்து தெரிவிக்க