உள்நாட்டு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

பயங்கரவாத தாக்குதல்: அதிகாரிகளை விசாரிக்க நீதிபதிகள் குழு

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களைத் தடுக்கத் தவறியமைத் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட எட்டு அடிப்படை உரிமை மனுக்களை விசாரணை செய்ய ஏழு பேர் கொண்ட முழு நீதிபதிகள் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

நீதிபதிகளான புவனேக அலுவிஹார, சிசிர டி அப்ரூ, பிரியந்த ஜெயவர்தன, பிரசன்ன ஜெயவர்தன, எல்.டி.பி. டெஹிதெனிய, மற்றும் முர்து பெர்னாண்டோ. ஆகியோர் அடங்கிய குழுவிற்கு தலைமை நீதிபதி ஜெயந்த ஜெயசூரிய தலைமை தாங்குவார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

காவல்துறைமா அதிபர்  பூஜித் ஜெயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிரி பெர்னாண்டோ ஆகியோர் பயங்கரவாத தாக்குதல்களைத் தடுக்கத் தவறியமைத் தொடர்பாக நடவடிக்கை எடுக்கும் நோக்கில் குறித்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

பாதுகாப்பு அதிகாரிகள் இருவர் மீதும் சட்டமா அதிபர் நடவடிக்கை எடுக்க, நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.

குறித்த மனுக்கள் தேசிய முக்கியத்துவம் வாய்ந்தவை என்று கருதப்படும் நிலையில் தலைமை நீதிபதி, நீதிபதிகள் அடங்கிய விசேட குழுவை நியமித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க