இலங்கை மக்களுக்கு சொந்தமாக காணிகளை வழங்கும் திட்டத்தை எவராலும் தடுக்க முடியாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அம்பாறையில் இடம்பெற்ற காணி வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு காணிகள் அவசியம் என்பதை நாட்டுக்கு தெரிவிக்க நாம் தயாராக இருக்கின்றோம். இதற்காக நாம் வீதிகளில் இறங்கிப் போராடவும் தயாராக உள்ளோம்.
மக்களுக்கு சொந்தமான காணி வழங்குவதற்கான சட்டவரைவை தயாரித்து அமைச்சரவை அங்கீகாரம் பெறுவதற்கு இரண்டு வருடங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது.
காணிகளை வழங்குவதில் எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் எதிர் அணியில் தற்போது உள்ளனர். ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவின் காலத்திலும் நான் அரசாங்கமாக இயங்கிய போது இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
எவ்வாறாயினும் தற்பொழுது அவ்வாறு தடுத்து நிறுத்துவதற்கு இடமளிக்கப் போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க