விளையாட்டு செய்திகள்

இந்தியாவிற்காக வென்றோம்: மகிழ்ச்சியில் தென்னாபிரிக்கா

அவுஸ்ரேலிய அணியை நாங்கள் வீழ்த்தியது இந்தியாவிற்கு மகிழ்ச்சி அளித்திருக்கும் என தென்னாப்பிரிக்கா அணித்தலைவர் டூபிளசிஸ் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் நடைப்பெற்று வரும் உலக கிண்ண கிரிக்கெட் தொடர் 2019-ன் லீக் போட்டிகள் நேற்றோடு முடிவடைந்துள்ளது.

தற்போதைய இறுதி பட்டியல் படி முதல் இடத்தில் 15 புள்ளிகளுடன் இந்தியாவும், இரண்டாம் இடத்தில் 14 புள்ளிகளுடன் அவுஸ்ரேலியாவும் உள்ளது. மூன்றாம், நான்காம் இடங்களில் முறையே 12, 11 புள்ளிகளுடன் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் உள்ளன.

நேற்றைய போட்டியில் அவுஸ்ரேலியாவை 10 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா வீழ்த்தியது தான். இதுவே புள்ளிப் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்ததற்கு முக்கிய காரணமாக அமைந்தது,

இப்போட்டியில் முதலில் துடுப்பாடிய தென் ஆபிரிக்க அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 325 ஓட்டங்கள் குவித்தது. அணியில் அதிகப்பட்சமாக அணித்தலைவர் டூபிளசிஸ் 100(94) ஓட்டங்கள் குவித்தார். இவருக்கு துணையாக றோய்சி வான் டிர் டூhசன் 95(97) ஓட்டங்களை பெற்று கொடுத்தார்.

இதனையடுத்து 326 ஓட்ட இலக்குடன் களமிறங்கிய அவுஸ்ரேலிய அணி ஆட்டத்தின் 49.5-வது பந்தில் 315 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து தோல்வியடைந்தது.

இந்த போட்டி முடிவடைந்த நிலையில் பேசிய அணித்தலைவர் டூபிளசிஸ், “அ ஸ்திரேலியாவை நாங்கள் வீழ்த்தியது இந்தியாவிற்கு மகிழ்ச்சி அளித்திருக்கும் என நம்புகிறோம்.

கடந்த 3 போட்டிகளில் சரியான நிலையில் இல்லாத நியூசிலாந்து அணி நிச்சயம் அரையிறுதியில் தோற்று போகும். இறுதி போட்டியில் இங்கிலாந்தை இந்தியா எதிர்கொள்ளும் என நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க