நீர்கொழும்பு மாநகர சபையின் எதிர்க்கட்சித் தலைவர் (யு.என்.பி) ரொய்ஸ் பெர்னாண்டோ கட்டானா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
அவர் இன்று கட்டானா காவல்துறை அதிகாரிகள் குழுவினரால் கைது செய்யப்பட்டார்.
வீடொன்றில் அத்துமீறி நுழைந்து ஒரு நபரைத் தாக்கியது மற்றும் தனியார் சொத்துக்களை களவாடிய
சம்பவம் தொடர்பாக 2019 மார்ச் 23 அன்று கட்டானா காவல்நிலையத்துக்கு அளிக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பாக சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர், குறித்த வழக்கின் முக்கிய சந்தேக நபரான மாநகர சபை தலைவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
கருத்து தெரிவிக்க