அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் நாடு இரண்டு முகாம்களாக பிளவு பட கூடும், எனினும் நாட்டை நேசிப்பவர்கள் அதற்கு இடமளிக்க மாட்டார்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன கூறுயுள்ளார்.
நாடு பிளவுபடும்போது பல்வேறு காரணங்களை அடுக்குவதில் அர்த்தமில்லை.
இரண்டு முகாம்களில் ஒன்றை சுதந்திர கட்சி தேர்வு செய்ய வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையில், ஸ்ரீ.ல.சு.க உறுப்பினர் சுசில் பிரேமஜயந்தவும் இதேபோன்ற உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளார்.
ஐக்கிய தேசிய முன்னணி வேட்பாளர் மற்றும் பொதுஜன பெரமுன வேட்பாளர் தலைமையிலான இரு கூட்டணி தேர்தலில் போட்டியிடும்.
அந்த இரண்டு பிரிவுகளிலும் வாக்குகள் பிரிக்கப்படும், அவற்றுக்கு இடையில் வேறு எந்த மாற்றங்களும் இடம்பெறப்போவதில்லை என அவர் கூறினார்.
எனவே இலங்கை சுதந்திரக் கட்சியும் (எஸ்.எல்.எஃப்.பி) இலங்கை பொதுஜன பெரமுனவின் (எஸ்.எல்.பி.பி) வேட்பாளரை ஆதரிக்க வேண்டும்,” என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அத்தோடு தற்போதைய ஜனாதிபதி போட்டியிடுவது தொடர்பாக முடிவு செய்திருக்க மாட்டார்,
ஆனால் சமீபத்தில் அக்கட்சியில் இணைந்த ஒரு சில நபர்கள் கட்சியின் எஞ்சியவற்றை அழிக்க முயற்சிக்கின்றனர் என அவர் குற்றம் சாட்டியுள்ளார் .
கருத்து தெரிவிக்க