தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கும், மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்கவுக்குமிடையில் எதிர்வரும் 9 ஆம் திகதி விசேட சந்திப்பொன்று நடைபெறவுள்ளது என அரசியல் தரப்புகளிலிருந்து அறியமுடிகின்றது.
நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நடைபெறவுள்ள இந்த சந்திப்பில் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சித் தலைவர்களும் பங்கேற்கவுள்ளனர்.
அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைமீது சபையில் இரண்டு நாட்கள் விவாதம் நடத்தப்பட்டு 11 ஆம் திகதி மாலை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.
இதன்போது நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு கோரிக்கை விடுக்கும் நோக்கிலேயே சம்பந்தனை, அநுரகுமார திஸாநாயக்க சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார் எனக் கூறப்படுகின்றது.
எனினும், ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கத்துக்கு சார்பான வகையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவெடுக்கும் என அக்கட்சி வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.
கருத்து தெரிவிக்க