நாட்டில் எந்த ஒரு இன அல்லது மத பாகுபாட்டையும் ஏற்றுக்கொள்ள முடியாது என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கியஸ்தர்களுடன் நடத்தப்பட்ட விஷேட கலந்துரையாடின் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இன ஒற்றுமை மற்றும் முஸ்லிம்களின் வர்த்தக செயற்பாடுகளை புறகணிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் இதன்போது கூறியுள்ளார்.
அத்துடன், இலங்கையில் உள்ள முஸ்லிம் மக்களுக்கு என்றும் தமது ஆதரவு இருக்கும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
கருத்து தெரிவிக்க