விளையாட்டு செய்திகள்

உலகக்கிண்ணம் ஏமாற்றம் அளிக்கிறது:கிறிஸ் கெய்ல்

அரையிறுதிக்கு முன்னேறாதது ஏமாற்றம் அளிப்பதாக மேற்கிந்திய அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ் கெய்ல் தெரிவித்துள்ளார்.

உலக கிண்ண கிரிக்கெட்டில் மேற்கிந்திய அணி 2 வெற்றி மட்டுமே பெற்று வெளியேறியது. அந்த அணியின் ‘அதிரடி வீரரான’ 39 வயதான கிறிஸ் கெய்ல் 9 ஆட்டங்களில் ஆடி 12 சிக்சர் உள்பட 242 ஓட்டங்களும், 2 விக்கெட்டும் எடுத்தார்.

இந்நிலையில் அவர் இதுவே தனது இறுதி உலக கிண்ண போட்டி என தெரிவித்ததோடு இப்போட்டி ஏமாற்றம் அளித்துள்ளதாக கூறியுள்ளார்.

‘உலக கிண்ண தொடர்களில் மேற்கிந்திய அணிக்காக விளையாடியதை பெருமையாகவும், கெளவரமாகவும் கருதுகிறேன். நாங்கள் அரைஇறுதிக்கு முன்னேற முடியாமல் போனது ஏமாற்றம் அளிக்கிறது.

2015-ம் ஆண்டு உலககிண்ண போட்டியில் ஜிம்பாப்வேக்கு எதிரான ஆட்டத்தில் நான் இரட்டை சதம் அடித்தேன். உலக கிண்ண போட்டியில் எனது சிறந்த செயல்பாடு அதுவாகும். உலக கிண்ண போட்டியில் இரட்டை சதம் அடித்ததை மெச்சத்தகுந்த சாதனையாக கருதுகிறேன்.

கடினமாக உழைத்தால் அடுத்த உலக கிண்ண போட்டியிலும் (2023) என்னால் விளையாட முடியும். ஆனால் எனது உடலை மேலும் வருத்த நான் விரும்பவில்லை.

அது மட்டுமில்லாமல் இந்த முறை போட்டியில் தடுமாறி விட்டேன். எனவே இன்னொரு உலக கிண்ண போட்டியில் ஆடுவது குறித்து நான் சிந்திக்கவில்லை. இது தான் எனது கடைசி உலக கிண்ண போட்டி’என கெய்ல் கூறியுள்ளார்.

கருத்து தெரிவிக்க