நாட்டில் இஸ்லாமிய சிறுவர் திருமணங்களை ஒழிப்பதற்கான தனி நபரின் பிரேரணை அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்தன தேரர் தெரிவித்தார்.
மாத்தறையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்தார்.
திருமணத்தின் மூலம் ஒரு நபரை இஸ்லாத்தை பின்பற்றும்படி கட்டாயப்படுத்துவதற்கு பதிலாக மத சுதந்திரத்தை வழங்க இந்த பிரேரணை முன்மொழிகிறது என்று அவர் கூறியுள்ளார்.
அத்துடன் சிறுவர் திருமணங்கள் குற்றமாக அறிவிக்கப்படுவதற்கு வலுவான அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
கருத்து தெரிவிக்க