இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட சமயங்களுக்கிடையிலான நல்லிணக்கத்திற்கான கலந்துரையாடல் இன்று இடம்பெற்றது.
இந்நிகழ்வு மட்டு கல்லடியில் அமைந்துள்ள கிறீன் கார்டன் விடுதியில் இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் கிளை தலைவர் த.வசந்தராசா தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் தலைவர் தக்ஷ ஜானந்த சுவாமிகள், மட்டக்களப்பு மறைமாவட்ட குருமுதல்வர் ஏ.தேவதாசன், மௌலி அல்ஹாஜ் எச்.எம்.ஷாஜஹான், மட்டக்களப்பு கச்சேரியின் மாவட்ட உதவிச் செயலாளர் ஆ.நவேஸ்வரன், மற்றும், இந்து, இஸ்லாம், மற்றும் கிறிஸ்த்தவ மதத் தலைவர்கள், மற்றும் சமூக செயற்பட்டார்கள், இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் உத்தியோகஸ்த்தர்கள், தொண்டர்கள்,உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
சமயங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை மட்டக்களப்பு மாவட்டத்தில், எதிர்காலத்தில், எவ்வாறு கொண்டு செல்தல், கிராம மட்டத்தில் எவ்வாறு இவற்றை எவ்வாறு அமுல்செய்தல் போன்ற பல விடையங்கள் பற்றி இதன்போது கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு ஸ்ரீ மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரெத்தின தேரர் அழைக்கப்பட்டிருந்தார் எனினும் அவர் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருக்கவில்லை.
கருத்து தெரிவிக்க