மஸ்கெலியா காட்மோர் பிரதான சாலையில் – மிட்லோதியன் தோட்ட பகுதியிலுள்ள பேருந்து தரிப்பிடத்தை ஆக்கிரமிக்கும் முயற்சியில் இருவர் இறங்கியுள்ளனர் என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
மஸ்கெலியா காட்மோர் பிரதான சாலையில் – மிட்லோதியன் தோட்ட பகுதியிலுள்ள பேருந்து தரிப்பிடம், மக்கள் நலனுக்காக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அரசியல் தலைவர் ஒருவரால் அமைத்துகொடுக்கப்பட்டது.
இந்நிலையில் பேருந்து தரிப்பிடத்தை இப்பகுதியில் உள்ள இரண்டு நபர்கள் ஆக்கிரமிப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட பிரதேச மக்கள்,
” இப்பகுதியில் சுமார் அறுநூறுக்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அனைவரின் நலன் கருதி அரசியல் தலைவர் ஒருவரால் குறித்த பஸ் தரிப்பிடம் அமைத்து கொடுக்கப்பட்டது.
இவ்வாறு அமைத்து கொடுக்கப்பட்ட போது வியாபார நிலையம் இருக்கவில்லை. ஆனால் கடந்த ஒரு வருடமாக தனி நபர்கள் இருவர் இதனை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.
இதில் ஒரு நபர் தனது வியாபார நிலையத்துக்காக பயன்படுத்தி வருகின்றார். மற்றைய நபர் பெட்டி கடை ஒன்றை தயார் செய்து வருகிறார். இன்னும் சிறிது காலத்தில் பேருந்து தரிப்பிடம் இவர்கள் இருவருக்கும் சொந்தமாகிவிடும்போல் தெரிகிறது.
மக்கள் பாவனைக்கு உதவும் வகையில் அமைக்கப்பட்ட பேருந்து தரிப்பிடம் தனி நபர்களின் சுய லாபத்துக்காக பயன்படுத்தும் இவ்வாறான செயல்கள் கண்டிக்கத்தக்கது.
எனவே, இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாகும் .” என்றனர்.
கருத்து தெரிவிக்க