புதியவை

நிலையை தக்கவைக்க களமிறங்கும் அவுஸ்ரேலியா!

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் அவுஸ்ரேலிய மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையலான போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

எமிரெட் ஓல்ட் டேபேர்ட் மன்சஸ்டர் மைதானத்தில் இலங்கை நேரம் இன்று மாலை 6.00 மணிக்கு இந்தப் போட்டி நடைபெறவுள்ளது.

இதில், அவுஸ்ரேலிய அணிக்கு ஆரோன் ஃபின்சும் தென்னாபிரிக்க அணிக்கு ஃபஃப் டூ பளஸிஸும் தலைமை தாங்கவுள்ளனர்.

இந்த போட்டியில் அவுஸ்ரேலிய அணி வெற்றி பெற்றால் அரையிறுதிப் போட்டியில், நியூசிலாந்து அணியை சந்திக்கும்.

இதேவேளை, தோல்வியை சந்தித்தால் இங்கிலாந்து அணியுடன் அரையிறுதியில் மோதும்.

கருத்து தெரிவிக்க