இலங்கை மீது அமெரிக்கா ஒருபோதும் அழுத்தங்களை பிரயோகிக்காது என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்ளிட்ஸ் தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் உள்ள உறவு குறித்து கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அமெரிக்க இராணுவ முகாம் ஒன்று இலங்கையில் ஏற்படுத்தப்படுமென்று ஊடகங்களின் ஊடாக போலியான கருத்துக்கள் பகிரப்பட்டு வருவதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் இராணுவ பயிற்சி மற்றும் அனர்த்தங்களின் போது உதவுதல் போன்றவற்றில் மாத்திரம் இணங்கிச் செயற்பட அமெரிக்கா எதிர்பார்ப்பதாகவும் அலைனா டெப்ளிட்ஸ் தெரிவித்தார்.
கருத்து தெரிவிக்க