கடந்த ஈஸ்டர் தினத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு ஏற்பட்ட அசாதாரண நிலையில் இருந்து தற்போது அமைதியான சூழலுக்கு மாறியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவை ஆனந்த பிரிவெனாவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பிக்குகளுக்கான தங்குமிட விடுதியை மகா சங்கத்தினரிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஈஸ்டர் தினத் தாக்குதல்களுடன் சம்பந்தப்பட்ட பயங்கரவாத அமைப்பு முழுமையாக அழிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
நாட்டில் நிலையான அமைதி கட்டியெழுப்பப்பட்டுள்ள நிலையில் தேசிய பாதுகாப்பு குறித்து எவ்வித பிரச்சினையும் இல்லை என்று ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், கடந்த நான்கரை வருட காலப் பகுதியில் எந்தவொரு காலத்திலும் இல்லாத வகையில் நாட்டில் ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் உறுதிப்படுத்த நடவடிக்கை எடுத்ததாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.
கருத்து தெரிவிக்க