நாட்டின் பல பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை தொடர்ந்து நிலவும் என எதிர்பார்ப்பதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
நாட்டின் ஒரு சில பகுதிகளில் சீரற்ற காலநிலை நிலவக்கூடும் எனவும் அந்த நிலையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
வட மாகாணத்தில் அதிகரித்த வேகத்தில் பலத்த காற்று வீசுவதற்கான சாத்தியம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், வடமத்திய மாகாணத்திலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் ஓரளவு பலத்த காற்று வீசுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க