ராஜபக்ஷ குடும்பத்தினரை தவிர்ந்த வேறெவரும் பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவ பதவிக்கு தகுதியற்றவர்கள் என அமைச்சர் தயா கமகே தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவம் குறித்தும் கட்சிகளின் தலைமைத்துவம் குறித்தும் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமை பதவிக்கு அமைச்சர் சஜித் பிரேமதாச மிகவும் தகுதியானவர் எனவும் அவர் கூறினார்.
சஜித் மிகவும் திறமையான ஒரு அமைச்சர் எனவும் அவருக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புக்களை மிகச் சிறந்த முறையில் நிறைவேற்றுவதாகவும் அமைச்சர் தயா கமகே சுட்டிக்காட்டியுள்ளார்.
கருத்து தெரிவிக்க