உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

எல்லை இடும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

ஹொரவ்பொத்தான பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட றத்மலை பகுதியைச் சேர்ந்த மக்கள் தபகஹவுல்பொத்த பகுதியில் சேனைப் பயிர்ச் செய்கை மேற்கொண்ட போது அதனை அண்டிய பகுதியில் வன இலாகா அதிகாரிகள் எல்லை இடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

எல்லை இடும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இப்பகுதியில் உள்ள சேனைப் பயிர்ச் செய்கையாளர்கள் போராட்டத்தில் இன்று ஈடுபட்டுள்ளனர்.

யுத்தத்திற்கு முன்னர் தமது காணிகளில் சேனைப் பயிர்ச் செய்கையை மேற்கொண்டு வந்ததாகவும் அதனை அடுத்து யுத்தம் முடிவடைந்திருந்த காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட சேனைப் பயிர்ச் செய்கையை இன்று வரைக்கும் மேற்கொண்டு வருவதாகவும் குறித்த மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்நிலையில் வன இலாகா அதிகாரிகள் அரசுக்குச் சொந்தமான காணி என கூறி தமது காணிகளை விட்டு செல்லுமாறு பயமுறுத்தி வருவதாகவும் குறிப்பிடுகின்றனர்.

தாங்கள் சேனைப் பயிர்ச் செய்கையை மேற்கொண்டு தமது அன்றாட கூலித் தொழிலாளாக சேனைப் பயிர்ச் செய்கையை செய்து வருவதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர்.

சேனை பயிற்சியை மேற்கொள்வதற்காக கமநல சேவைகள் திணைக்களத்தின் ஊடாக அரசாங்கத்திற்கு வரிப்பணம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்தனர்.

தமக்கு வாழ்வாதாரத்தை மேற்கொள்வதற்காக அரசாங்கம் இந்த சேனை பயிர் செய்கைக்குரிய காணியை பெற்று தருவதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வன இலாகா அதிகாரிகளின் அடாவடித்தனத்தை போக்க வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க