ஈஸ்டர் தினத்தில் முன்னெடுக்கப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் பிரதி பொலிஸ் மா அதிபர்கள் மூன்று பேர் உள்ளிட்ட 9 பேருக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து எதிர்வரும் சில தினங்களில் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பொலிஸ் விஷேட விசாரணைப் பிரிவுப் பிரதி பொலிஸ் மா அதிபர் மேவன் டி சில்வா தலைமையில், இது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
குறித்த குற்றச்சாட்டு தொடர்பான அறிக்கை தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாக பாதுகாப்புத் தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
இதற்கமைய, கடமையிலிருந்து தவறியமை, பொறுப்பின்றி செயற்பட்டமை உள்ளிட்ட சில குற்றச்சாட்டுக்கள் அவர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க