மன்னர் காலத்தை போன்று மகாசங்கத்தினரின் அறிவுரை அவசியம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
உடரட்ட அமரபுர சங்க சபைக்கு சொந்தமான மகாவலி நதிக்கரையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள போதனை மண்டபத்தை ஜனாதிபதி நேற்று புதன்கிழமை மகாசங்கத்தினரிடம் கையளித்தார்.
இதன்போது உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மகாசங்கத்தினரின் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்களுக்கு அமைய செயற்படுவது மிக முக்கியம் என்பதை உணர்ந்தே அன்றும் இன்றும் தான் செயற்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புத்த பெருமானால் மகாசங்கத்தினருக்கு போதிக்கப்பட்ட ஒழுக்கக் கோட்பாடுகள் பௌத்த சாசனத்தின் அடிப்படையாகவே காணப்பட்டுள்ளது.
தேவநம்பியதிஸ்ஸ மன்னர் ஆட்சி காலம் முதல் சிங்கள மன்னர்கள் பௌத்த மதத்தை நிலைநாட்டுவதற்கும் பௌத்த துறவர கிரியைகளை மேற்கொள்வதற்கும் அரச அனுசரணை வழங்கியதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
இலங்கை ஆயிரம் வருடத்திற்கும் மேலாக தர்ம இராஜ்ஜியமாக விளங்குவதற்கு அதுவே காரணமாக அமைந்திருப்பதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டிருந்தார்.
கருத்து தெரிவிக்க