உள்நாட்டு செய்திகள்புதியவை

கோட்டாபயவை சந்திக்க சிங்கப்பூர் செல்லும் கூட்டு எதிரணி!

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை சந்திக்க குழு ஒன்று சிங்கப்பூருக்கு விஜயம் செய்துள்ளது.

கூட்டு எதிரணியில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று இன்று புதன்கிழமை சிங்கப்பூர் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களான பிரசன்ன ரணதுங்க, தேனுக விதானகமகே, பிரியங்கர ஜயரத்ன, பிரசன்ன ரணவீர, இந்திக அனுருத்த மற்றும் கெஹெலிய ரம்புக்வெல்ல ஆகியோர் சென்றுள்ளனர்.

கருத்து தெரிவிக்க