மத்தள விமான நிலையத்தில் நெல் சேமிப்பதற்காக நெல் சந்தைப்படுத்தல் சபை சுமார் ரூ .5.1 மில்லியன் செலுத்தியுள்ளமை தெரியவந்துள்ளது.
ஊழல் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைகுழு விசாரணைகளில் இருந்து இவ்விடயம் தெரிய வந்துள்ளது.
விமான நிலையம் மற்றும் ஏவியேஷன் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு 2015 முதல் 2016 வரையான ஆறு மாதங்களுக்கு ரூ .850,000 செலுத்தப்பட்டதாக நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது.
2016 ஆம் ஆண்டில் மத்தள விமான நிலையத்தில் உள்ள பண்டகசாலையில் இருந்து சுமார் 5000 மெட்ரிக் தொன் நெல் அகற்றப்பட்டது.
குறித்த பண்டகசாலை சர்வதேச தரத்திற்கு அமைய கட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் , குறித்த பகுதியில் ஏற்பட்ட சேதங்கள் சீராக்கப்படவில்லை என்பதை கடந்த வாரம் விமான நிலையத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஆணைக்குழுவின் விசேட பிரிவு கண்டறிந்துள்ளது.
கருத்து தெரிவிக்க