பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு இன்று மதியம் சென்ற குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளே அவரை கைது செய்துள்ளனர்.
21/4 தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு இன்று (02) காலை அவர் அழைக்கப்பட்டிருந்தார்.
எனினும், திடீர் சுகவீனம் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையிலேயே சி.ஐ.டியினர் அவரை கைது செய்துள்ளனர்.
கருத்து தெரிவிக்க