உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்

சோபா ஒப்பந்தம் பந்துல குணவர்தன குற்றச்சாட்டு

பிரதமர் தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அமெரிக்காவுடன் செய்துகொள்ளவுள்ள சோபா ஒப்பந்தத்தின் ஊடாக அந்நாட்டுப் படைகளை நாட்டிற்குள் எந்தவித கட்டுப்பாடும் அற்றவகையில் அனுமதிப்பதற்கு தயாராகி வருவதாக எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அணியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

எவ்வாறாயினும் இதுகுறித்து அமெரிக்கத் தூதரகம் கருத்து வெளியிட்டிருக்கின்றது.

இலங்கைக்குள் எந்த விதத்திலும் தமதுநாட்டுப் படையினர் எந்தவொரு படைமுகாமையும் அமைக்கப்போவதில்லை என்று அமெரிக்கத் தூதரகம் கூறியுள்ளது.

ஒத்துழைப்பு தொடர்பிலான ஒப்பந்தக் கலந்துரையாடலே தற்போது இடம்பெறுவதாகவும், இலங்கையின் இறையான்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்தவொரு ஒப்பந்தமும் செய்துகொள்ளப்பட மாட்டாது என்றும் அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க