முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் கட்டாய விடுமுறையில் உள்ள பொலிஸ் மா அதிபர் புஜித் ஜயசுந்தர ஆகியோர் இன்று செவ்வாய்க்கிழமை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாக உள்ளனர்.
கடந்த ஈஸ்டர் தினத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் வாக்கு மூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்காக இன்று காலை 10.00 மணிக்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில், அவர்கள் இருவரையும் சந்தேகநபர்கள் என பெயரிட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு சட்ட மா அதிபர் அறிவித்தல் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பூஜித் ஜயசுந்தர மற்றும் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோர் குறித்த சம்பவங்கள் தொடர்பில் வழங்கப்பட்ட ஆலோசனைகளை நடைமுறைப்படுத்தாமை தொடர்பில் சட்டமா அதிபர், பதில் பொலிஸ்மாஅதிபருக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க