உள்நாட்டு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

‘மரணதண்டனை மனித உரிமைகளுக்கு பெரும் பின்னடைவு’

மரணதண்டனைகளை மீண்டும் அமுல்படுத்துவதையும், அதன் 43 ஆண்டு கால தடையை இல்லாமல் செய்வதையும் இலங்கை அரசு நிறுத்த வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் (HRW) இன்று தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 4 போதைப்பொருள் குற்றவாளிகளை தூக்கிலிட உத்தரவிட்டதாகவும் இது அதிகரித்து வரும் போதைப் பிரச்சினைகளை முடிவுக்குக் கொண்டுவரும் வேண்டும் கூறியுள்ளார்.

‘இவ்வாறு மரண தண்டனையை நிறைவேற்றும் இலங்கையின் திட்டம் மனித உரிமைகளுக்கு பெரும் பின்னடைவாகும்’ என மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசிய பணிப்பளார் பிராட் ஆடம்ஸ் கூறினார்.

இலங்கை நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக ஆசியாவில் மரணதண்டனைக்கு எதிரான ஒரு அரணாக இருந்து வருகிறது.

இப்போது சிறிசேன அரசாங்கம் மனித உரிமைகளை வீசியெறிய முற்படுகிறது.

1976 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் மரணதண்டனை நிறைவேற்றப்படவில்லை.

தற்போது 1299 மரண தண்டனை கைதிகள் இலங்கையில் உள்ளனர். இவர்களில் 1,215 பேர் ஆண்களும் 84 பெண்களும் உள்ளனர்.

இவற்றில் 48 பேர் போதை கடத்தலுடன் தொடர்புபட்டவர்கள் என மனித உரிமை கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க