பாடப்புத்தகங்களில் வண்ண புகைப்படம் மற்றும் தகவல்களை வழங்க அதிக செலவு ஏற்பட்டுள்ளமையை கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியம் அளித்த பின்னர் அவர் இதனை ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
“இவ்வாறு அச்சிடுவது வழக்கம்” என்று கூறிய அவர் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் ஜனாதிபதிகள் அச்சிட்ட செய்திகளின் மாதிரிகளை சமர்ப்பித்ததாக தெரிவித்தார்.
கல்வியமைச்சர் அகிலாவிராஜின் வண்ண புகைப்படம் மற்றும் அவரது செய்தியை அச்சிடுவதற்கு அரசாங்கம் அதிக செலவு செய்துள்ளதாகக் கூறி நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ ஜனாதிபதி ஆணைகுழுவில் முறைப்பாடு அளித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க