வெளிநாட்டு செய்திகள்

ஆப்கானிஸ்தானில் தாக்குதல் :பாகிஸ்தான் கடும் கண்டனம்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இன்று காலை வெடிகுண்டு நிரப்பிய காரை வெடிக்க செய்தும், துப்பாக்கிகளால் சுட்டும் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பலர் கொல்லப்பட்டனர். தாக்குதலுக்கு தலிபான்கள் பொறுப்பேற்றனர்.

இந்நிலையில் தாக்குதல்களுக்கு பாகிஸ்தான் அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

அந்நாட்டு வெளியுறவு அமைச்சு வெளியிட்டுள்ள செய்தியில், அனைத்து வடிவங்களிலான பயங்கரவாதத்திற்கும் பாகிஸ்தான் கண்டனம் தெரிவிக்கின்றது.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நாங்கள் இரங்கல்களை தெரிவிக்கின்றோம்.

இதுபோன்ற தாக்குதல்கள் ஆப்கானிஸ்தான் நாட்டின் அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை ஆகியவற்றுக்கு சீரழிவை ஏற்படுத்தும் என தெரிவித்து உள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டில் தாக்குதல் நடத்தி வரும்  தலீபான் பயங்கரவாதிகளை ஒடுக்கும் முயற்சியில் ஆப்கானிஸ்தான் அரசு படைகளும், அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகளும் ஈடுபட்டு வருகின்றன. எனினும் இதில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

அமெரிக்காவுக்கும், தலீபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே இதுவரை 6 சுற்று பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.

தொடர்ந்து, கட்டார் நாட்டில் அமெரிக்காவுக்கும், தலீபான் பயங்கரவாதிகளுக்கும் இடையேயான சமரச பேச்சு நேற்று முன்தினம் தொடங்கியது.

கருத்து தெரிவிக்க